[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மாலை முதலே கனமழைக்கு வாய்ப்பு

rain-in-next-2-days

வங்கக்கடலில்‌ ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி

தென் கிழக்கு வங்ககடலில் சென்னையில் இருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி,தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது இதனையடுத்து இன்று மாலையில் இருந்து 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிக்கை

வங்ககடலின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இன்றையநிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று இரவு புயலாக மாறும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் டிச.2ம் தேதி சென்னை,வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close