[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஓராண்டாக துணை வேந்தர் இல்லை.. சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

convocation-adjournment-in-madras-university

சென்னை பல்கலைக்கழகத்திற்கு சுமார் ஓராண்டாக துணை வேந்தர் இல்லாமல் இருப்பதால் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தை வழிநடத்த துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் மூன்று முக்கிய பல்கலைக்கழகங்கள் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு சுமார் ஓராண்டாக துணை வேந்தர் இல்லை. மாநிலத்தின் ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரிகளையும் கட்டுக்குள் வைத்திருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் 6 மாதங்களாக துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் ஓராண்டிற்கும் மேலாக துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை பக்ல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் இல்லாமல் இருப்பதால் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி செயலாளரின் கையெழுத்தோடு பட்டங்களை வழங்க முடிவு செய்யப்பட்டாலும், அதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவே பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும் பல்கலைக்கழகங்கள் தொய்வின்றிச் செயல்பட தாமதமின்றி துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close