[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

வாடகை பாக்கியால் ஏடிஎம் மையங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

chennai-7-atm-centres-sealed-for-rent-balance

ரயில்வே நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டிய வாடகை நிலுவை காரணமாக சென்னை ரயில் நிலையங்களில் உள்ள 7 ஏடிஎம் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் வங்கிகளையும், ஏடிஎம் மையங்களையும் நாடிச் செல்லும் சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில், வாடகை பாக்கி நிலுவையில் இருப்பதாகக் கூறி சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், மாம்பலம், வில்லிவாக்கம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மையங்களுக்கு ரயில்வே துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த ரயில்நிலையங்களில் ஏடிஎம் மையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2012ம் ஆண்டுக்குப் பின் புதுப்பிக்கப்படவில்லை மற்றும் வாடகை கட்டணத்தையும் செலுத்தவில்லை என்பதாலேயே மேற்கூறிய ஏடிஎம் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close