[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

வங்கிக்கணக்கு தொடங்கினால் ரூ.10 ஆயிரம்.. வதந்தியால் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்

theni-people-gathered-in-municipality-over-rumour

வங்கி கணக்கில் பணம் இல்லாதவர்களின் வங்கி கணக்கில் பிரதமர் மோடி, ரூ.10 ஆயிரம் வரவு வைப்பதாக பரவிய வதந்தியால், தேனி நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.

‌தேனி மாவட்டத்தில் வங்கி கணக்கை புதியதாக தொடங்கவும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தேனி நகராட்சி அலுவலகத்தில் வங்கிகள் சார்பாக இந்த முகாம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் வங்கி கணக்கில் பணம் இல்லாதவர்களின் கணக்கில் பிரதமர் மோடி ரூ.10,000 வரவு வைப்பதாகவும், அதற்கான முகாம்தான் தற்போது நடைபெற்று வருவதாகவும் வதந்தி கிளம்பியது.

இதையடுத்து தேனி, அல்லிநகரம், மொம்மையகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் அதிக‌ளவில் திரண்டு வந்த‌னர்.

வதந்தியை உண்மையென்று எண்ணி, வேலைகளை விட்டுவிட்டு ஆதார் எண், குடும்ப அட்டை, புகைப்படம் என அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்து பதிவு செய்வதற்காக வரிசைகளில் காத்து நின்றனர், வங்கி ‌கணக்குடன் ஆதார் இணைக்கும் முகாம் என்று தெரிந்தபிறகு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close