[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

'தமிழகத்தில் அரசியல்‌ நாகரீகம் கேள்விக்குறியாக உள்ளது'... ஸ்டாலின்

stalin-question-about-state-politically-fashionable

வட மாநிலத்தில் தலைவர்களுக்கிடையே உள்ள அரசியல் நாகரீகம் தமிழகத்தில் இல்லை என்பது வேதனையாக உள்ளது என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு துணைத் தலைவரும் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் எழுதிய புத்தகத வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புத்தகத்தை திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் வெளியிட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததாக கூறினார். மேலும், அந்தக் காலத்தில் தலைவர்களுக்கிடையே இருந்த அரசியல் நாகரீகம் இப்போது இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close