[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

டெல்டா பகுதிகளில் தொடரும் சோகம்.. பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மரணம்..!

again-one-more-farmer-dead-in-cauvery-delta-district

நாகை அருகே போதிய மழையின்றி பயிர்கள் கருகியதால் மன உழைச்சலில் இருந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கீழையூரைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமாரன். இவர் 8 ஏக்கர் நிலத்தில் நெல் விதித்திருந்தார். ஆனால் போதிய மழை இல்லாததாலும் காவிரியில் நீர் வராததாலும் பயிர்கள் அனைத்தும் கருகத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, பயிர் சாகுபடிக்காக வாங்கிய கடனை கட்டுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 4 நாட்களாக அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். விதைத்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகி வீணாகுகிறதே, வாங்கிய கடனை அடைக்க முடியவில்லையே என்ற சோகம் அவரை தூங்க விடாமல் வாட்டியுள்ளது. இந்தத் துயரத்தில் இருந்த ராஜ்குமாரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

ராஜ்குமாரன் உயிரிழப்பை அடுத்து, தமிழகத்தில் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close