[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

சென்னையில் அல்கய்தா அமைப்பைச் சேர்ந்தவர் கைது

one-more-arrested-in-chennai-related-in-alqaida-aide-based-in-madurai

அல்கய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மேலும் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக மதுரையில் கைது செய்யப்பட்ட 3 பேர் அளித்த தகவலின்பேரின் சென்னை ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தாவூத் சுலைமான் என்பவரை தேசிய புலானாய்வு அமைப்பினர் கைது செய்தனர். திருவான்மியூரில் வாடகை வீட்டில் அவர் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அல்கய்தா அடிப்படைவாத அமைப்பை நடத்தி வந்ததாக கரீம், அயூப் மற்றும் அப்பாஸ் அலி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஹக்கீம், தாவூத் சுலைமான் ஆகிய இரண்டுபேரை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் கொல்ல குறிவைத்திருந்ததாகவும், 9 நாட்டு தூதரகங்களுக்கு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், மதுரையில் கைதானவர்களை அடுத்தகட்ட விசாரணைக்காக கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close