[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

சென்னை உயர்நீதிமன்றத்தின் 2017-ம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு

chennai-highcourt-festival-holiday-announcements

சென்னை உயர் நீதிமன்றத்தின் 2017-ம் ஆண்டிற்கான விடுமுறை தின பட்டியலை உயர்நீதிமன்றம் சார்பில் அதன் தலைமைப் பதிவாளர் ஆர்.சக்திவேல் நேற்று வெளியிட்டார்.

2017-ம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் பின்வருமாறு:

தொடர் விடுமுறை தினங்கள்:

கோடை கால விடுமுறையாக மே 1- முதல் மே 31-வரை ஒரு மாதத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. செப்டம்பர் 23- முதல் அக்டோபர் 2- வரை தசரா விடுமுறை. டிசம்பர் 23-முதல் டிசம்பர் 31-வரை கிறிஸ்துமஸ் விடுமுறை. ஜனவரி 13-முதல் ஜனவரி 16-வரை பொங்கல் பண்டிகைக்காகவும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற விடுமுறை தினங்கள்:

ஜனவரி 26 குடியரசு தின விடுமுறை.மார்ச் 29-முதல் மார்ச் 31-வரை தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை. ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பிற்காகவும், மே 1 மேதினத்திற்காகவும், ஜூன் 26 ரம்ஜான் பண்டிகைக்காகவும் விடுமுறை. ஆகஸ்டு 14 கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஆகஸ்டு 15 சுதந்திர தினம் மற்றும் ஆகஸ்டு 25 விநாயகர் சதுர்த்திக்காக விடுமுறை.

செப்டம்பர் 29 ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்காக விடுமுறை. தீபாவளி பண்டிகை அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அக்டோபர் 16-ம் தேதி திங்கள் முதல் அக்டோபர் 19-ம் தேதி வியாழன் வரை 4 நாட்களுக்கு விடுமுறை. அக்டோபர் 14, 15 சனி, ஞாயிறு விடுமுறை தினங்களையும் சேர்த்தால் தீபாவளி பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை. டிசம்பர் 1 மிலாடி நபிக்காவும், டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை. வார இறுதி நாட்கள் மற்றும் அதில் வரும் பண்டிகை.

உயர் நீதிமன்றத்திற்கு எல்லா சனி, ஞாயிறு கிழமைகளும் விடுமுறை.வரும் 2017-ம் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, பக்ரீத், விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகைகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் வருவதால் உயர் நீதிமன்ற விடுமுறை கால பட்டியலில் இந்த பண்டிகைகள் இடம்பெறவில்லை.

விடுமுறை இல்லா மாதங்கள்:

பிப்ரவரி, ஜூலை மற்றும் நவம்பர் ஆகிய 3 மாதங்களில் வார இறுதி நாட்கள் தவிர மற்ற விடுமுறை தினம் ஏதும் இல்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close