[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

'இது மக்களின் நலன் சார்ந்த போராட்டம்'.. மு.க.ஸ்டாலின்

currency-issue-stalin-led-the-struggle-dmk

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களின் சிரமங்களை தீர்க்கக் கோரி சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது தொடர்பாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழகத்தில் திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை பாரிமுனையில் எதிர்க் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து திமுகவினர் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது பேசிய ஸ்டாலின் செல்லா நோட்டு அறிவிப்பால் நாட்டில் பெருமளவு பணத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்தியா முழுவதும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும், இது கட்சி சார்ந்த போராட்டம் இல்லை மக்களின் நலம் சார்ந்த போராட்டம் என்றும் கூறினார்.

Advertisement:
Related Tags : Currency issue dmk mk stalin rs500andrs1000
Advertisement:
Advertisement:

[X] Close