[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி.... நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்

sanitation-workers-layoffs-in-theni-govt-hospital

தேனி அரசு மருத்துவமனையில் நோயாளிக‌ளுக்கு துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளித்த சம்‌பவத்தில், தனியார் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி அரசு மருத்துவமனையில், துப்புரவுத் தொழிலாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சம்‌பவம் தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பானது. இதனையடுத்து, மருத்துவ கல்வி இயக்குநர் பொறுப்பு வகிக்கும் நாராயண பாபு தேனி அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்திய அவர், ‌சம்பவம் தொடர்பாக ஒவ்வொரு வார்டாக சென்று நோயாளிகளிடமும் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த புகாரில் தனியார் ஒப்பந்த துப்பரவுத் தொழிலாளர்கள் 3 பேரை பணிநீக்கம் செய்திருப்பதாக கூறினார்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாராயண பாபு தெரிவித்தார். தேனி அரசு மருத்துவமனையில் நாளை சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close