[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

பாம்பன் பாலத்தில் சேதம்... ஒரு வழியாக வாகனங்கள் இயக்கம்

pamban-bridge-damege

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதால், பாலத்தின் ஒரு வழியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

1988-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பாம்பன் பா‌லத்தில், கடந்த ஆண்டு 18 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பாலத்தை இணைக்கும் ராட்சத இரும்புத் தகடுகள் தற்போது, சேதமடைந்திருப்பதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின்பு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதம் ஏற்பட்ட பகுதி மட்டும் தடுப்புகள் மூலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. போக்குவரத்தை சரி செய்யும் பணியில்‌ போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close