[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

14 டன் புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை வருகை

14-ton-new-500-notes-arrival-chennai

டிசம்பர் ஒன்றாம் தேதி நெருங்கும் நிலையில் அதிகமானவர்கள் பணம் எடுக்க வங்கிகளையும், ஏடிஎம் மையங்களையும் நாடுவர் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.

நாடு முழுவதிலும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகத்திற்கு வந்துள்ளன. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் இன்னும் ஒரு சில இடங்களில் சிக்கல் நீடிக்கிறது.

இதனிடையே, இன்றும் நாளையும் வங்கிகள் விடுமுறை என்பதாலும், டிசம்பர் ஒன்றாம் தேதி நெருங்குவதாலும் வரும் வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பணம் எடுக்க வங்கிகளையும் ஏடிஎம் மையங்களையும் நாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நாசிக்கில் இருந்து 14 டன் புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட பணம், கண்டெய்னர்கள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை ‌வந்தடைந்த பணம் விரைவில் வங்கிகளுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. புதிய ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை தடுக்க தொடர்ந்து பணம் வரவழைக்கப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close