[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பணம் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலையில் வங்கிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

today-and-tomorrow-holiday-for-banks

தமிழகத்தில் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணம் எடுக்க ஏடிஎம்-களில் மக்கள் மொத்தமாக கூடுவதால் ஏடிஎம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறையாகவும், ஒன்றாது, மூன்றாவது சனிக்கிழமைகள் வேலைநாளாகவும் வங்கிகள் செ‌யல்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல்‌ நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி நான்காவது சனிக்கிழமையான இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை தினமாகும். எனவே, வங்கிக் கிளைகள் அனைத்தும் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இனி திங்கள் கிழமை அன்றே செயல்படும்.

வங்கிக் கிளைகள், ரிசர்வ் வங்கி அலுவலகம் ஆகியவை இரண்டு நாட்கள் செயல்படாது என்பதால், பணம் எடுப்பதற்காக ஏடிஎம்-களில் மக்கள் மொத்தமாக கூடுவார்கள். இதன் காரணமாக ஏடிஎம் மையங்கள் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் செல்லாக்காசு அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் இன்னும் பண தட்டுப்பாடு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close