[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

பல லட்சம் ரூபாய் டி.டி.யாக மாற்றம்.... தனியார் நிறுவனத்திற்கு துணை போகிறதா வங்கி?

blackmoney-changed-to-whitemoney-through-dd-in-andhra-bank

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஆந்திரா வங்கியில், தனியார் நிறுவனம் பெயரில் கடந்த 3 நாட்களாக பல லட்சம் ரூபாய் டி.டி.யாக மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

வங்கிகளில் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்றால், வங்கி கணக்கில் செலுத்திதான் டி.டி. எடுக்க முடியும். ஆனால், ராசிபுரம் சின்ன கடைவீதியில் உள்ள ஆந்திரா வங்கியில், கடந்த மூன்று நாட்களாக ஒரு மைக்ரோ பைனான்ஸ் தனியார் நிறுவனம் மகளிர் சுய உதவி குழு மூலமாக பல லட்சம் ரூபாயை டி.டி. மூலமாக மாற்றியது தெரிய வந்துள்ளது.

மும்பையில் உள்ள அந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திற்கு, இப்பகுதியில் உள்ள ஊழியர்கள் மகளிர் குழுக்கள் பெயரில் கணக்கில் செலுத்தாமல் நேரடியாக 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து 50,000 குறைவாக டி.டி.எடுத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக 100-க்கும் மேற்பட்ட டி.டி.க்கள் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர வங்கி மேலாளர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, தங்களுடைய மேல் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்துதான் டி.டி. வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close