[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

தருமபுரி இளவரசன் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

dharmapuri-ilavarasan-death-case-shifted-to-cbcid

தருமபுரி இளவரசன் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், செல்லாங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவரை நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டதால், அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து திவ்யா தனது தாயுடன் செல்ல விரும்புவதாகக் கூறி, அவருடன் சென்று விட்டார்.

பின்னர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலையில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசன் உயிரிழந்து கிடந்தார். இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றம் இல்லை என்பதால் இந்த வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளவரசனின் தந்தை இளங்கோ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இளவரசன் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close