[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூட திட்டம் இல்லை...தமிழக அரசு விளக்கம்

aalangulam-cement-factory-will-not-shut-down-tamilnadu-govt

தமிழக அரசுக்குச் சொந்தமான ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூடவோ, சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ அரசிடம் எந்த திட்டமும் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விளக்கம் அளித்துள்ளது.

ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறி திமுக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண்மை இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ‘ஆலங்குளம் சிமெண்ட் ஆலை லாபகரமாக இயங்கிவருவதால் அதனை மூடவோ, தனியாருக்கு விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ அரசிடம் எந்த திட்டமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் சிமெண்ட் ஆலை முன்பு நடந்த போராட்டங்கள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டவை என்றும் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில் நடத்தப்பட்டவை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அரசின் விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close