[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சென்னையில் இன்று முதல் புழக்கத்திற்கு வரும் புதிய 500 ரூபாய் நோட்டுகள்

new-500rs-currency-note-to-chennai-from-today

சென்னையில் இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்று ஸ்டேட் பாங்க் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

கோவையில் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது ‘புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னையில் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் இவை விரைவில் எஸ்பிஐ ஏடிஎம்களில் நிரப்பப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்’ என்றும் கூறினார். மேலும் வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக புதிய வங்கிக்கணக்கை துவக்கி தங்களது பணத்தை டெப்பாஸிட் செய்யலாம் என்றும் கூறினார்.

கடனுக்கான வட்டி குறைப்பு தொடர்பாகவும் வங்கிகளுக்கான முதலீட்டை பெருக்க ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுகுறித்து இப்போது பதில் கூற முடியாது என்று தெரிவித்தார்.

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் முன்பே வெளிவந்துள்ள நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதால் பணத்தட்டுப்பாடு ஒரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close