[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

தேனி அரசு மருத்துவமனையின் அவலம்.. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் துப்புரவு பணியாளர்கள் ( PT EXCLUSIVE)

puthiya-thalaimurai-exclusive-about-theni-govt-hospital

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புதிய தலைமுறை அம்பலப்படுத்தியதையடுத்து, தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் எவ்வித தயக்கம் இன்றி மேற்கொண்டு வருவது புதிய தலைமுறை கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

நோயாளிகளுக்கு சவரம் செய்தல், நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்து செல்வது, நோயாளிகளின் காயங்களுக்கு மருந்து போடுவது, கட்டு கட்டுவது, நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் ஏற்றுவது, அவர்களுக்கு மருந்துகளை வாங்கி தருவது, விஷம் குடித்து வரும் நோயாளிகளின் வயிற்றை சுத்தம் செய்வது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கையாளுவது என மருத்துவர்கள், செவிலியர்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் இவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூறுகையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நிர்பந்தத்தினாலேயே கடந்த 3 ஆண்டுகளாக இந்த பணிகளை மேற்கொள்வதாகவும், இதை செய்ய மறுத்தால் வேலை விட்டு நீக்கி விடுவதாக எச்சரித்ததாகவும் தெரிவித்தனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இது போன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக அரங்கேறி வருவது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தவறான சிகிச்சையால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியாக தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close