[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

karunanidhi-mourning-to-balamuralikrishna-died

கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழம்பெரும் கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு செய்தி அறிந்து பெரிதும் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். இளம் வயதிலேயே சிறந்த இசைவாணராகப் பெயர் பெற்று, தமிழகம் மற்றும் ஆந்திராவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கச்சேரிகளில் பங்கு பெற்று தனக்கெனத் தனிப் புகழ் நாட்டியவர் பால முரளிகிருஷ்ணா எனவும் கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் ‘பத்மவிபூஷன்’, சென்னை மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளுக்கும் அவர் சொந்தக்காரர் என்று குறிப்பிட்டுள்ள திமுக தலைவர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக தாம் இயற்றிய இசைப் பாடலின் சில வரிகளை அவர் பாடியது இன்னும் தனது செவிகளில் தவழ்ந்து கொண்டிருப்பதாக சிலாகித்துள்ளார். அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினர் மற்றும் இசை உலகினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் கருணாநிதி, தனது அறிக்கையில் கூறியுள்ளார். உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று உயிரிழந்த கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு இசையுலகைச் சேர்ந்தவர்களும், திரையுலகப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close