[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

தமிழகத்தில் மக்கள் புழக்கதிற்கு வந்தன புதிய 500 ரூபாய் நோட்டுகள்.. !

new-500-notes-available-in-tamilnadu

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியானது. புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே தமிழகத்தில், வங்கிகள் மற்றும் ஏடிஎம்-கள் மூலம் மக்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆனால் வடமாநிலங்களில் மக்கள் புழக்கத்திற்கு வந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் இதுவரை தமிழகத்திற்கு வந்து சேராமமல் இருந்தது.

இந்நிலையில், சேலம் நகரிலுள்ள கரூர் வைஸ்யா வங்கிக் கிளை கவுண்ட்டரில் இன்று புதிய 500 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இத்தகவலை அறிந்த பொதுமக்கள் பலரும், வங்கிக் கிளைக்கு வந்து ஆர்வத்துடன் புதிய ‌500 ரூபாய் நோட்டுகளை வாங்கிச் சென்றனர். மேலும் சிலர், புதிய 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைதளங்கள் மூலமாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close