[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

இன்று மாலை இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச்சடங்கு

today-evening-funeral-ceremony-for-carnatic-singer-balamuralikrishna

மறைந்த இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று பாலமுரளி கிருஷ்ணா(86) காலமானார். அவரின் உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ‌அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகினர், இசையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பாலமுரளி கிருஷ்ணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ‌நடிகர் கமலஹாசன்‌, பின்னணிப் பாடகர்கள் ஜேசுதாஸ், மனோ, பின்னணிப் பாடகிகள் வாணி ஜெயராம், சுஜாதா, இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்டோர் பாலமுரளிகிருஷ்ணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. கோபாலபுரத்தி‌லிருந்து டிடிகே சாலை, சிபி ராமசாமி சாலை, கீரீன்வேஸ் சாலை வழியாக அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close