[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

செல்லா நோட்டுகள் மூலம் மாநகராட்சிகளில் குவியும் வரி

income-tax-in-corporations-in-tamilnadu

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் 154 கோடியே 38 லட்ச ரூபாயை பொதுமக்கள் வரியாக செலுத்தி உள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நவம்பர் 11-ஆம் தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் 154 கோடியே 38 லட்ச ரூபாயை பொதுமக்கள் வரியாக செலுத்தி உள்ளனர்.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் ‌அதிகபட்சமாக இதுவரை 58 கோடியே 33 லட்ச ரூபாய் வரி வசூலாகியுள்ளது. கோவை மாநகராட்சியில் 41 கோடியே 81 லட்ச ரூபாயும், மதுரை மாநகராட்சியில் 16 கோடி ரூபாயும், திருப்பூர் மாநகராட்சியில் 13 கோடியே 48 லட்சம் ரூபாயும் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 8 கோடி ரூபாயும், திருச்சி மாநகராட்சியில் 7 கோடியே 29 லட்ச ரூபாயும், ஈரோடு மாநகராட்சியில் 6 கோடி ரூபாய் அளவிலும், நெல்லை மாநகராட்சியில் 5 கோடியே 8 லட்சம் ரூபாயும் வசூலாகியுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் 4 கோடியே 6 லட்ச ரூபாயும், தூத்துக்குடி மாநகராட்சியில் 4 கோடியே ஒரு லட்ச ரூபாயும் வசூ‌லாகியுள்ளது. குறைந்தபட்சமாக தஞ்சை மாநகராட்சியில் 1 கோடியே 30 லட்ச ரூபாயும், திண்டுக்கல் மாநகராட்சியில் ஒரு கோடியே 15 லட்ச ரூபாயும் வரி வசூலாகி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close