[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

balamurai-krishna-dead

கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக் குறைவால் காலமானார்.

புகழ்பெற்ற பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா சென்னை ஆர்.கே. சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

1930-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி ஆந்திர மாநிலம், சங்கரகுப்தமில் பாரம்பரியமிக்க இசைக் குடும்பத்தில் பால முரளி கிருஷ்ணா பிறந்தார். தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடங்கிய அவர் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக 2 முறை தேசிய விருதுகளையும், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதையும் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுள்ளார். பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close