[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பாலமுரளி கிருஷ்ணாவின் பாடலும் விருதுகளும்

balamurali-krishna-songs-awards

பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

கர்நாடக இசைப்பாடகரான பாலமுரளி கிருஷ்ணா தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார்.இவர் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக 2 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.தமிழில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான திருவிளையாடல் படத்தில் ” ஒரு நாள் போதுமா”, கவிக்குயில் படத்தில் “சின்ன கண்ணன் அழைக்கிறான்” உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவர் கடைசியாக தமிழில் விமல் நடிப்பில் வெளியான பசங்க படத்தில்”அன்பிலே அழகாகும் வீடு ” என்ற பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 8 மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர்.பிரான்ஸ் அரசு அந்நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அளித்து இவரை கௌரவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close