[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

ஹெல்மெட் அணியாததால் விபத்தில் உயிரிழந்த காவலர்

nagappattinam-police-died-in-road-accident

போக்குவரத்து விதிகளை மக்கள் முறையாக பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டிய காவலர் ஒருவரே தலைகவசம் அணியாததால் விபத்தில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் போக்குவரத்துக் காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் திருநாவுக்கரசு. இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு காவலர் குடியிருப்பிற்கு தமது பைக்கில் சென்றுள்ளார். புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் தெரு வழியாக அவர் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம்‌ காவலர் வாகனம் மீது மோதியது. ஹெல்மெட் அணியாததால், கீழே விழுந்த காவலர் திருநாவுக்கரசிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்‌டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close