[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

சோலார் டிராக்டரை வடிவமைத்த தமிழக மாணவருக்கு 'இளம் விஞ்ஞானி 2016' விருது

president-award-got-10th-std-student

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி‌யைச் சேர்ந்த 10- ஆம் வகுப்பு மாணவன் ஜனாதிபதி விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரை சேர்ந்த சாரதி சுப்புராஜ், செண்பகவல்லி தம்பதியின் மகன் சிவ சூர்யா. இவர் கோவில்பட்டியில் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிவசூர்யா இந்த இளம் வயதிலேயே 8 புதுமைகளை கண்டுபிடித்து இந்தியாவின் ‘இளம் விஞ்ஞானி 2016’ என்ற விருதினை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யா நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்றில் பயிற்சி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். தற்போது அவருக்கு மற்றொரு மணிமகுடமாக குடியரசுத்தலைவர் ப்ரணாப் முகர்ஜியிடம் விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் பிரிவில் மாணவன் சிவசூர்யாவிற்கு ப்ரணாப் முகர்ஜி ’ இளம் விஞ்ஞானி 2016’ விருதினை வழங்கி கௌரவப்படுத்தினார். வெள்ளி மெடல், 10 ஆயிர ரூபாய் ரொக்க பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிவசூர்யா தனது கண்டுபிடிப்புக்களுக்கு சிகரம் வைத்தாற் போல் உருவாக்கியது தான் விவசாயிகளுக்கு உதவும் வகையில் சூரிய ஒளியில் இயங்க கூடிய டிராக்டர். இந்த டிராக்டரை சூரிய ஒளியில் செல்போன் மூலம் இயங்கும் வகையில் வடிமைத்துள்ளார். இதனை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எளிதில் இயக்கலாம். மிகக்குறைந்த செலவில் எளிதில் இதன் மூலமாக உழவு செய்ய முடியும் என்கிறார் சிவசூர்யா.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close