[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மதன் கைது

madan-was-arrested-at-tirupur

பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மதன், மணிப்பூரிலிருந்து திருப்பூர் வந்தபோது கைது செய்யப்பட்டார்.

மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.81 கோடி மோசடி செய்ததாக மதன் மீது 119 புகார்கள் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அவரை தேடிவந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் ரிஷிகேஷ், மணிபூர் உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீசார் மதனைத் தேடி வந்தனர். இதற்கிடையில் பண மோசடிக்கு உதவியாக இருந்த அவரின் நண்பர்கள் சுதிர், குணா உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது குடும்பத்தினரிடம் அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மணிப்பூரிலிருந்து திருப்பூர் வந்தபோது மதனை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், கைதான மதன் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் ஜார்ஜ் கூறியுள்ளார்.

Advertisement:
Related Tags : Chennai madhan madhan case tirupur
Advertisement:
Advertisement:
[X] Close