[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

கமிஷனுக்கு புதிய ரூபாய் நோட்டு...வேலூர் அருகே போக்குவரத்து அதிகாரிகள் சஸ்பெண்ட்

transport-officers-suspended

வேலூர் அருகே போக்குவரத்து பணிமனையில் புதிய ரூபாய்களை எடுத்துவிட்டு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய்களை வைத்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இங்கு தினமும் ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை வசூல் செய்யப்படுகிறது. அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஜோசுவா மற்றும் காசாளர் ராஜாராம் ஆகியோர் வசூல் செய்யப்பட்ட தொகையை தினமும் வங்கியில் செலுத்தி மாற்றி வந்துள்ளனர்.

வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை ரூ.50 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகளாக வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு வாங்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை இவர்கள் இருவரும் கமிஷன் அடிப்படையில் வெளியே கொடுத்து ரூ.2.50 லட்சம் வரை லாபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் புகார் அளித்தை தொடர்ந்து, இருவரையும் சஸ்பெண்ட் செய்து சோளிங்கர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close