[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

தமிழகத்தில் தொடரும் அவலம்.. பூச்சி மாத்திரை சாப்பிட்டு விவசாயி தற்கொலை..!

thanjavore-farmer-suicide

தஞ்சாவூர் மாவட்டம் பொன்னவராயன் கோட்டையில், தண்ணீரின்றி பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி பூச்சி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொன்னவராயன் கோட்டை பகுதியில் மாசிலாமணி என்ற விவசாயி 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி சம்பா பயிர்கள் சாகுபடி செய்து வந்துள்ளார். தண்ணீர் இல்லாத காரணத்தால், சம்பா பயிர்கள் காய்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் விவசாயிக்கு நிலத்தை குத்தககைக்கு விட்ட உரிமையாளர் தனக்கு உரிய நெல் தர வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விவசாயி பூச்சி மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை காவல்துறையி‌னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close