[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ரூபாய் நோட்டு விவகாரம் - நவ.24-ல் திமுக போராட்டம்

karunanithi-said-a-human-chain-protest-for-currency-issue

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் நவம்பர் 24-ல் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்ட அவர், மத்திய அரசு, ‘அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி’ என்பதைப் போல, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த அறிவிப்பால், பத்து நாட்களுக்கு மேலாக பொதுமக்கள், வேலைக்கு செல்ல முடியாமல், வங்கி முன் பல மணி நேரம் காத்திருப்பதாகத் தெரிவித்த அவர், இதுகுறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க வில்லை என்று புகார் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு எந்தவிதமான எதிர்ப்பையும் பதிவு செய்யாததால், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் வரும் வியாழக்கிழமை மாலை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close