[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஐ.சி.யு.விலிருந்து தனி அறைக்கு மாற்றப்படுகிறாரா முதலமைச்சர் ஜெயலலிதா?

chief-minister-jayalalithaa-will-change-to-separate-ward

அப்போலோ மருத்துவமனையில், முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு இன்று மாலையில் மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 55 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

முதலமைச்சரின் உடல்நிலை குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, சிகிச்சைக்குப் பின் முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். அவர் விரும்பும் போது வீட்டிற்கு செல்லலாம் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு இன்று மாலை மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close