[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறு...!

polls-voting-status-in-aravakurichi-section

தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெற்றுவரும் அரவக்குறிச்சி தொகுதியின் கள நிலவரங்களை தற்போது காண்போம்.

அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி, திமுக சார்பில் கே.சி.பழனிசாமி, பாஜக சார்பில் எஸ்.பிரபு, தேமுதிக சார்பில் முத்து உள்ளிட்ட 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாதுகாப்பான முறையில் நடைபெற்று வரும் அரவக்குறிச்சி தொகுதிகளில், வேலாயுதம்பாளையம் வாக்குச்சாவடியில் 892 வாக்குகள் உள்ளது. இதில் தற்போது வரை 85 க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி வாக்குபதிவு மையத்தில், 25 வாக்குச்சாவடியில், 30000- க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதியுடைவர் ஆவர். தற்போது வரை பெண்கள் தான் அதிகம் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவினர் தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளின் உள்ளே வாக்கு ஏஜெண்டுகள் இருப்பதாக அதிமுகவினர் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இதன் காரணமாக போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளும் வெப் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close