[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி குறித்து அறிந்துகொள்வோம்..!

pondicherry-election-status

தமிழகத்தில் மூன்று தொகுதிகளை காட்டிலும், ஒருபங்கு கூடுதலாகவும், மிகுந்த விறுவிறுப்புடன், புதுச்சேரி நெல்லித்தோப்பு தேர்தல் களம் காணப்படுகிறது.

முதல்வருக்காக ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியை விட்டுக்கொடுத்திருக்கிறார். அந்தவகையில் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதியின் தேர்தல் நிலவரங்களை பற்றி காணலாம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி, மீண்டும் முதலமைச்சர் ஒருவர் போட்டியிடும் தொகுதி என்ற அந்தஸ்தனை தனதாக்கிக் கொண்டுள்ளது. ‌இத்தொகுதியில், 14 ஆயிரத்து 939 ஆண் வாக்காளர்களும், 16 ஆயிரத்து 418 பெண் வாக்காளர்களும் உள்ளனர். அயல்நாடுவாழ் இந்திய வாக்காளர்கள் 5 பேரும், 4 சர்வீஸ் வாக்காளர்களும் உள்ளனர்.ஆக மொத்தம், இந்த தொகுதியில், 31,366 வாக்காளர்கள் உள்ளனர். 1964- ஆம் ஆண்டிலிருந்து 2016- ஆம் ஆண்டு தேர்தல் வரையில், திமுக ஆறு முறையும், அதிமுக இரண்டு முறையும், காங்கிரஸ், ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் முன்னணி இயக்கம் ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் திமுக சார்பில் தொடர்ந்து 5 முறை வெற்றிப் பெற்ற தொகுதியாகும். கடந்த 2006- ஆம் ஆண்டும், 2011- ஆம் ஆண்டும் இந்த தொகுதியை அதிமுக தனது வசமாக்கியது.அந்த இரண்டு முறையும், வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன, ஓம்சக்தி சேகர், இம்முறை அக்கட்சியின் வேட்பாளராக களத்தில் உள்ளார்.‌ மொத்தம் 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாக்குச் சாவடிகளும் சிசிடிவி மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் இருவருக்கிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. பாதுகாப்பு நடவடிக்கை கருதி நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close