[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

அரவக்குறிச்சி தொகுதியில் காலை 9 மணி வரை 21% வாக்குப்பதிவு

aravakkuruchi-election-updates

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தின் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அரவக்குறிச்சி தொகுதி ஆண்டிப்பட்டிகோட்டையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவி எந்திரம் பழுதடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 21% வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது.

அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி, திமுக சார்பில் கே.சி.பழனிசாமி, பாஜக சார்பில் எஸ்.பிரபு, தேமுதிக சார்பில் முத்து ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close