[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

தஞ்சாவூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

polling-begins-in-four-constituency

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த வியாழக்கிழமை மாலையுடன் முடிவடைந்த நிலையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளளது. வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நான்கு தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காவலர்களும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

4 தொகுதிகளிலும் தேர்தல்‌ நேர்மையாகவும், வாக்காளர்கள் அச்சமின்றியும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கின்றன. புதுச்சேரியை பொறுத்தவரையில், வாக்குப்பதிவு நாளான இன்று, ‌மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

4 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் வரும் 22-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close