[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார்..அப்போலோ தலைவர் பிரதாப் சி ரெட்டி தகவல்

jayalalithaa-is-fine-prathap-c-reddy

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளதாக அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அப்போலோ மருத்துவமனை சென்று வருகின்றனர். அதேசமயம் அவரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனையும் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, சிகிச்சைக்குப் பின் முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். செயற்கை சுவாசமின்றி இயற்கையாகவே சுவாசிப்பதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பும் போது வீட்டிற்கு செல்லலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொற்று மீண்டும் ஏற்படாமல் தடுக்கவே அவசர சிகிச்சை பிரிவில் ஜெயலலிதா உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close