[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி?

how-to-caste-vote-if-not-available-voter-id

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள் அதற்கு மாற்றாக புகைப்படத்துடன் கூடிய 11 அடையாள அட்டைகளில் ஒன்றைக் காண்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

*அதன் படி வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு பதிலாக பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமத்தைக் காண்பிக்கலாம்.

*மத்திய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டையை காண்பிக்கலாம். அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்களைக் காண்பிக்கலாம்.

*பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு ஆகியவையும் ஏற்கப்படும்.

*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை அல்லது தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு ஏற்றுக்கொள்ளப்படும்.

*புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் அல்லது தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட சீட்டு ஏற்கப்படும். அல்லது நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டையைக் காண்பிக்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close