[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

சென்னை பாரிமுனை அருகே வங்கி கட்டடத்தில் தீ விபத்து

fire-in-bank-building

சென்னை பாரிமுனை பகுதியில் தனியார் வங்கிகள் உள்ள 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொதுமக்களும் வங்கி ஊழியர்களும் பத்திரமாக உயிர் தப்பினர்.

சென்னை பாரிமுனை பகுதி ராஜாஜி சாலையில் உள்ள தனியார் வங்கி கட்டடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டடதில் 3- வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாக சென்று பொதுமக்களையும் வங்கி ஊழியர்களையும் பத்திரமாக மீட்டனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதல், இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்போ உயிரிழப்போ ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

கட்டடத்தில் உள்ள ஏசி அல்லது ஜெனரேட்டரில் இருந்து இந்த தீ விபத்து எற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close