[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

new-announcement-about-demonetisation-of-rs-500-rs-1000

கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ளநோட்டுகள் புழக்கத்தைத் தடுப்பதற்காகவும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவந்த மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

* பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மக்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

* பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

* வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ள அடையாள அட்டையுடன், விண்ணப்பம் ஒன்றையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

* இந்த அறிவிப்பினால் இணைய வழி பணபரிமாற்றங்கள், செக் மற்றும் காசோலை பணபரிமாற்றங்கள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

* வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யப்படும் தொகை கண்காணிக்கப்படாது என்றும், அதற்கு மேல் செய்யப்படும் தொகை குறித்து அரசு ஆய்வு நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல சட்டத்துக்குப் புறம்பான வகையில் சேர்க்கப்படும் பணத்துக்கு அதிகபட்சமாக 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

* பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள், வரி செலுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24 வரை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

* சில்லறை தட்டுப்பாடால் நாடு முழுவதுமுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் நவம்பர் 18 வரையும், விமானநிலைய பார்க்கிங் கட்டணம் நவம்பர் 24 வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மையங்களில் மேற்கொள்ளும் அனைத்து பரிமாற்றங்களுக்கான சேவைக்கட்டணம் டிசம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

* வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு கைவிரலில் அடையாள மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் பதிவு செய்து, விளைபொருளை விற்கும் விவசாயிகள் வாரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை காசோலையாகவோ, வங்கிக் கணக்கி‌ல் இணைய தள பரிமாற்றம் மூலமாகவோ பெற அனுமதிக்கப்படும். காசோலையை வங்கியில் செலுத்தி, அவர்கள் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

* வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் பதிவு பெற்ற விளைபொருளைக் கொள்முதல் செய்யும் வணிகர்கள் வாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

* விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுக்கான பீரிமியத்தைச் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* பயிர்க் கடனுக்கான அனுமதியைப் பெற்ற விவசாயிகள், தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் கடன் தொகையில் வாரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

* பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, அதிகம் பேர் வங்கிக் கவுன்ட்டரை அடையும் வகையில், ஒருவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த உச்ச வரம்பு, நாளை முதல் 2 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. கைவிரலில் மை வைப்பதன் மூலம் ஒருவர் ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பை பெற முடியும். அதற்கு மேற்பட்ட தொகைக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து பிறகு எடுத்துக் கொள்ளலாம்.

* திருமணத்துக்காக பணம் தேவைப்படுவோர் ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து அதி‌கபட்சமாக இரண்டரை லட்ச ரூபாயை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். திருமணம் தொடர்பான ஆவணங்களை இதற்கு சான்றளிக்க வேண்டும்.

* மத்திய அரசு ஊழியர்களில் சி பிரிவு வரை உள்ளவர்கள், அலுவலகம் வாயிலாக முன்பணமாக ரூ.10,000 வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த முன்பணம், அடுத்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close