[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

4 தொகுதி தேர்தல்... இன்றுடன் ஓய்கிறது பரப்புரை

election-campaign-finished-today

தமிழகத்தில் தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியிலும் இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. இதற்கிடையில் இத்தொகுதிகளில் கட்சிகளுக்கான விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், 4 தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.

திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை வானொலி ஆகியவற்றின் மூலம் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் பரப்புரை மேற்கொள்ளவும் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. தொகுதிக்கு வெளியில் இருந்து தேர்தல் பணிக்காக அழைத்து வரப்பட்ட அரசியல் கட்‌சியினர் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு தொகுதியில் தங்கியிருக்கக் கூடாது என்றும், இதை உறுதிப்படுத்த தங்கும் விடுதிகள்‌, திருமண மண்டபங்கள், விருந்தினர் இல்லம், சமுதாயக்கூடம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17- ஆம் தேதி மாலை 5 மணி முதல், வாக்குப் பதிவு நாளான 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக் கணிப்புக்கும், 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close