[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

இடது கையில் மை வைக்கப்பட்டால் வாக்களிக்க முடியாது: ராஜேஷ் லக்கானி

if-the-ink-placed-on-left-hand-in-bank-could-not-vote-rajesh-lakhoni

வங்கிகளில் பணம் மாற்றும் போது தவறுதலாக இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டால் வாக்களிக்க முடியாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புது நோட்டுகளாக மாற்றும் போது வாடிக்கையாளர்களுக்கு வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கிகளில் பணம் மாற்றும் போது தவறுதலாக இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டால் நாளை மறுதினம் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெறுகிறது. எனவே இத்தகைய தொகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் வங்களில் பணம் மாற்றும் போது மை வைக்கும் சமயத்தில் விழிப்புணர்வுவோடு இருந்தால் தான் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close