ஜல்லிக்கட்டை அனுமதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடை விதித்து உச்சநீதிமன்ற கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனால் காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு கடந்த ஜனவரி 7-ல் அறிவிப்பாணையை வெளியிட்டது. அரசின் இந்த அறிவிக்கைக்கு எதிராக பல்வேறு விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டில் தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் இந்த மனுவுடன் இணைத்து இன்று விசாரிப்பதாக அறிவித்தது. தமிழக அரசின் மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகளை மதத்துடன் தொடர்புபடுத்தும் தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், ஜல்லிக்கட்டு அனுமதிக்கக் கூடியது அல்ல என்று கூறி தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !