[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ரயிலில் பணம், நகைகள் கடத்த முயன்ற ஆர்.பி.எப் ஐ.ஜி

railway-ig-arrested-for-smuggling

ஹவுரா ரயிலில் பணம், நகைகளை ரயில்வே பாதுகாப்புத்துறை உயரதிகாரி ஒருவர் கடத்‌திச் செல்ல முயன்றதாக புகார் எழுந்ததையடுத்து அவரிடம் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.

சென்னை ஐ.சி.எப் பாதுகாப்பு பொறுப்பிலுள்ள ஆர்.பி.எப் படை ஐ.ஜி.யான எஸ்.கே.பாரி, திருச்சியிலிருந்து சென்னை வழியாக ஹவுரா செல்லும் ரயிலில் பணம், நகைகளை கடத்திச் செல்வதாக சிபிஐக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. குறிப்பாக, ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் ரயில் பெட்டி மூலம் பணம் மற்றும் நகைகளை கொண்டுசெல்ல முயற்சி நடந்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், ஆர்.பி.எப் ஐ.ஜி பாரியை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவரிடமிருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதன் மதிப்பு குறித்து சிபிஐ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் ரயில் பெட்டியை முன்பதிவு செய்தது ஏன் என்பது பற்றியும், அதற்கு உடந்தையாக வேறு அதிகாரிகள் இருந்தார்களா என்பது குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆர்பிஎப் ஐ.ஜி. பாரி, ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close