[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உத்தரவு

madurai-high-court-ordered-to-close-kalingapatty-tasmac

கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றக் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரரும், கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவரருமான ரவிச்சந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுமனு தாக்கல் செய்திருந்தார். இதில், மதுபானக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கு நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மனுதாரர் ரவிச்சந்திரனின் கோரிக்கையை பரிசீலித்த ஆட்சியர் அதை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, கலிங்கப்பட்டியில் உள்ள மதுபானக்கடையை மூட வேண்டும் என்று ரவிச்சந்திரன் மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கலிங்கப்பட்டியில் உள்ள மாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளது.

இந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close