[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

சென்னை வங்கியில் பணம் மாற்ற வருவோருக்கு 'மை' வைக்கும் முறை தொடங்கியது

use-of-indelible-ink-finger-of-customers-in-chennai-pnb-bank

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பழைய பணம் மாற்ற வருவோருக்கு விரலில் மை வைக்கப்பட்டு பணம் வழங்கப்படுகிறது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் அளித்து புதிய நோட்டுகளை மாற்றுவோரின் கை விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் நேற்று அறிவித்தார். கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் குழுக்களாக சில நபர்களை நியமித்து தங்கள் பணத்தை பல்வேறு வங்கிகளில் தொடர்ந்து மாற்றி வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் வங்கிகளில் பணம் மாற்ற வருவோருக்கு மை வைக்கும் முறை இன்று காலை வட மாநில வங்கிகளில் தொடங்கியது. இதன்படி டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மை வைக்கப்பட்ட பின்னரே பணம் மாற்றித் தரப்பட்டது. தமிழகத்திற்கு மை வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து பணம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close