[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் 3 பேர் பதவி ஏற்பு

3-new-judges-sworn-in-chennai-high-court

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பு‌திதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதிகள் ஆர்.எம்.டி. டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து புதிய நீதிபதிகள் 3 பேரும் இன்று காலை 10 மணி அளவில் பதவியேற்றனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிபதிகள் 3 பேரின் வாழ்க்கை குறிப்பு பின்வருமாறு:

நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன்

வேலூர் மாவட்டம் ஆ‌ற்காட்டைச் சேர்ந்த டீக்காராமன், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை நிறைவு செய்த‌வர். 1988ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த இவர், 2004 ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்ச்சி பெற்றார்‌. அதன்பின் சென்னை, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார்‌. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் பதிவாளராக பணியாற்றினார். கடந்த 2014ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பணி ஆணையக்குழு உறுப்பினர் செயலராக பதவி வகித்தார்‌.

நீதிபதி என்.சதீஷ்குமார்

நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த சதீஷ்குமார், கோவை அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பபை நிறைவு செய்தவர். 2005 ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட இவர், வேலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றினார். 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மைய இயக்குநராக பதவி வகித்தார்‌. கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக சதீஷ்குமார் நியமிக்கப்பட்டார்‌.

நீதிபதி என்.சேஷசாயி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த சேஷசாயி, பொருளாதாரத்திலும், சட்டப்படிப்பிலும் இளைநிலை பட்டம் பெற்றவர். 1986ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த இவர், நாகர்கோவிலில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2005 ஆண்டில் இருந்து சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்‌. இறுதியாக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்தார்‌. இப்போது இம்மூவரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close