[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ஆம்னி பேருந்து கட்டண வசூல்.. ஓய்வுபெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் குழு

high-court-to-appoint-panel-to-fix-omnibus-fare

ஆம்னி பேருந்துகள் கட்டண நிர்ணயம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்த செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (நீதி) பொதுநல மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை, நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

கடந்த விசாரணையின் போது ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று விசாரணையின் போது, ஆம்னி பேருந்துகள் கட்டண நிர்ணயம் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த. குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி பாட்ஷா மற்றும் போக்குவரத்து ஆணையர், இயக்குனர், நிதி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆய்வறிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 12 வாரங்களில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close