[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய டிப்ஸ்...

some-tips-for-to-find-original-currency-notes

நாடு முழுவதிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வெளியானது.

தற்போது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்-கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய ரூபாய் நோட்டுகள் நல்ல நோட்டுகள் தானா? என்பதை கண்டறிய சில எளிய அம்சங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* புதிய 2,000 ரூபாய் நோட்டில் 7 கோடுகள் அதன் பக்கவாட்டில் இருக்கும். இதேபோல் 500 ரூபாய் நோட்டில் அதன் பக்கவாட்டில் 5 கோடுகள் இருக்கும்.

*ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் பாதுகாப்புக் கோடு தற்போதைய புதிய நோட்டுகளில் நீல நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. முந்தைய நோட்டுகளில் இவை பச்சை நிறத்தில் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

*அதேபோல 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் வலது புறத்தில் அவற்றின் நிறம் சற்று மாறும். வெவ்வெறு கோணங்களில் பணத்தை வைத்து பார்க்கும் போது இந்த நிறமாற்றம் நமக்கு புலப்படும்

*2000 ரூபாய் நோட்டுகள் மெஜந்தா நிறத்திலும், 500 ரூபாய் நோட்டுகள் கிரே நிறத்திலும் அச்சிடப்பட்டுள்ளன.

*2000 ரூபாய் நோட்டை விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும் போது 2,000 என்ற எழுத்து தெரியும். ஆர்.பி.ஐ.யின் பாதுகாப்பு கோடு மற்றும் 2,000 என்ற எண்ணும் தெரியும். மகாத்மா காந்தி உருவம், நீர்க்கோடு(வாட்டர் மார்க்), அதேபோல் 2000 எண் எலெக்ரோ பைப் முறையிலும் தெரியும்.

*நோட்டுகளின் எண் வரிசை சிறிதாக தொடங்கி பிறகு பெரிய அளவினதாக இருக்கும். இது ஒவ்வொரு தாளின் இடது பக்க மேல்புறம் மற்றும் வலது புறம் கீழே இடம்பெறும்.

• பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்டறியும் வகையில் வலதுபுறம் மேல்பக்கத்தில் 500 சற்று புடைப்பாக அச்சிடப்பட்டிருக்கும். அத்துடன் 500 ரூபாய் நோட்டில் தேவநாகரி எழுத்தும் இடம்பெற்றிருக்கும்.

*நோட்டின் பின்புறத்தில், ஸ்வாச் பாரத் லோகோ, மங்கள்யான் படம், 2016-ஆம் ஆண்டும் இடம்பெற்றிருக்கும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close