[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

உள்ளாட்சித் தேர்தலுக்கான தடை மேலும் 3 வாரங்களுக்கு தொடரும்

madras-high-court-extends-stay-on-local-body-elections-in-tamil-nadu

உள்ளாட்சித் தேர்தலுக்கான தடையை நீக்கக்கோரும் வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் உள்ளாட்சித் தேர்தலுக்கான தடை நீடிக்கிறது. மாநில தேர்தல் ஆணையத்தின் மனுவிற்கு பதில் அளிக்க திமுக அவகாசம் கேட்டது. இதனால் வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே (செப். 24) வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே உள்ளாட்சி பதவியிடங்களில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும் இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருபாகரன், ’உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர் டி.எஸ்.ராஜசேகர் மேல்முறையீட்டு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சட்டப் பிரிவு 243 (ஓ) படி, தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெறும்போது, நீதிமன்ற உத்தரவுகளால் தடை ஏற்படுத்த முடியாது. அரசியலமைப்புச் சட்டப்படி, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, அக்டோபர் 24-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவால், தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை அக்டோபர் 18ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. அப்போது நீதிபதிகள் ’தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு, தமிழக அரசு, திமுக தரப்பில் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்படும்’ என்று உத்தரவிட்டனர். இதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் 27 பக்க கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய திமுக சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கை மேலும் 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close