[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

தமிழகத்தில் 117 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பியாக பதவி உயர்வு

117-inspector-promoted-as-dsp-in-tamil-nadu

தமிழகத்தில் 117 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

1997-ம் ஆண்டுக்கு முன்பு நேரடியாக காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து, அதன்பின்னர் காவல் ஆய்வளாராக பணியில் தொடர்ந்தவர்களுக்கு இந்த பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் விரைவில் பணியிடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

உள்துறை செயலர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், அனைத்து காவல்துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. பதவி உயர்வைத் தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள காவல் ஆய்வாளர் பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-யை தாண்டியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close